×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

TCS பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. டாடா நிறுவனத்தின் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.! 

TCS பணியாளர்களுக்கு ஊழிய உயர்வு.. டாடா நிறுவனத்தின் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.! 

Advertisement

டாடா நிறுவனம் தனது கிளையான டாடா கன்சல்டன்சி நிறுவன பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டி.சி.எஸ் சார்பில் பணியாற்றி வரும் 70% ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், எஞ்சியுள்ள 30% ஊழியர்களுக்கு அவர்களின் செயல்திறன் பொறுத்து ஊதிய உயர்வானது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீஸில் 6 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலயில், அவர்களில் 4 இலட்சம் பேருக்கு கிறிஸ்துமஸ் காலத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

டாடா நிறுவனத்தின் அறிவிப்பால் புத்தாண்டை அந்நிறுவனத்தின் பணியாளர்கள் மகிழ்ச்சியாக எதிர்கொள்கின்றனர். மேலும், ஊதிய உயர்வு வழங்கியதற்கு தங்களின் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TCS company #Salary increment #Tata Consultancy Service #ஊதிய உயர்வு #டாடா நிறுவனம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story