×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கப்பல்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து! 6 இந்தியர்கள் பலி; மேலும் 6 பேர் மாயம்

tansania ships fired 6 indians dead

Advertisement

ரஷியாவின் கிரிமியா கடல் பகுதியில் நின்று கொண்டிருந்த இரு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல்போன 6 இந்தியர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரிமியா கடல் பகுதியில் கெர்ச் ஜலசந்தி உள்ளது. முன்னர் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கிரிமியா கடல் பகுதி 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு ரஷ்யாவுடன் இணைந்தது. கிரிமியா பகுதியில் உள்ள கெர்ச் துறைமுகத்தில் தான்சானியா நாட்டின் இரு சரக்கு கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கடந்த திங்கட்கிழமை கியாஸ் டேங்கர் இருந்த ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்றது. 

அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் கியாஸ் டேங்கரில் தீப்பிடித்துள்ளது. மளமளவென எரிந்த தீ இரு கப்பல்களுக்கும் பரவியுள்ளது. அந்த இரு கப்பல்களில் ஒன்றில் 8 இந்தியர்கள் உள்பட 17 பணியாளர்களும் மற்றொரு கப்பலில் 7 இந்தியர்கள் உள்பட 15 பணியாளர்களும் இருந்துள்ளனர்.  இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த ரஷிய கடற்படையை சேர்ந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் இரண்டு கப்பல்களிலும் மொத்தம் இருந்த 32 பணியாளர்களில் 12 பேரை மட்டுமே உயிருடன் மீட்டுள்ளனர்.

இரண்டு கப்பல்களிலும் இதுவரை 14 பேரின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 6 பேர் இந்தியர்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் காணாமல் போன 6 பேரும் இந்தியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் 4 பேர் துருக்கியை சேர்ந்தவர்கள்.

இந்த விபத்தில் இறந்த இந்தியர்களின் பெயர் விபரத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பினல் குமார் பாரத்பாய் டான்டெல், விக்ரம் சிங், சரவணன் நாகராஜன், விஷால் டோட், ராஜா தேவநாராயண் பானிகிரஹி, கரண்குமார் ஹரிபாய் டான்டெல் ஆகியோர் இவ்விபத்தில் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காணாமல் போன 6 இந்தியர்கள் சித்தார்த் மேகர், நீரஜ் சிங்க், செபாஸ்டின் பிரிட்டோ சகாயராஜ், ரிஷிகேஷ் ராஜு சக்பால், அக்சய் பாபன் ஜாதவ் மற்றும் ஆனந்தசேகர் அவினாஷ் ஆகியோரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#russia #shipfire #tansania ships #indians dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story