தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரதமர் மோடியின், டுவிட்டர் கணக்கு ஒப்படைப்பு! தமிழ் பெண்களுக்கு கிடைத்த கவுரவம்!

tamilnadu womens using modi social media

tamilnadu womens using modi social media Advertisement


மகளிர் தினமான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி, ஏழு பெண் சாதனையாளர்களிடம், தன், 'டுவிட்டர்' சமூக வலைதள கணக்கை ஒப்படைத்தார். அதில், அவர்கள், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். மோடியின் டுவிட்டர் கணக்கில், பதிவிட்ட முதல் நபர் என்ற பெருமையை, சென்னையை சேர்ந்த பெண் பெற்றார்.

பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இதற்காக பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் தனித்தனியாக அவர் கணக்கு வைத்துள்ளார். இந்த தளங்கள் ஒவ்வொன்றிலும் அவரை பல கோடிக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முன்னணி இடம் பெற்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டில் உலக அளவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு பிறகு 3-வது இடத்தை பிரதமர் மோடி பெற்றிருந்தார்.

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினமான நேற்று, நாட்டின் சிறந்த, ஏழு பெண் சாதனையாளர்களிடம், தனது டுவிட்டர் கணக்கை, பிரதமர் மோடி ஒப்படைத்தார். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த சினேகா மோகன்தாஸ், மாளவிகா ஐயர் ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தனர். அந்த, ஏழு பெண்களில், 'இந்திய உணவு வங்கி' என்ற அமைப்பை நிர்வகித்து வரும், சென்னையை சேர்ந்த, சினேகா மோகன்தாஸ் என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வெளியிட்ட பதிவில், "என் பெயர் சினேகா. வீடற்றோருக்கு உணவளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய என் தாயால் ஈர்க்கப்பட்டவள் நான். இதற்காக, புட்பேங்க் ஆப் இந்தியா என்ற அமைப்பை நான் துவக்கினேன். நம் ஏழை மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மாளவிகா ஐயர் வெளியிட்ட பதிவில் தனது 13-வது வயதில் குண்டுவெடிப்பு ஒன்றில் கைகள் இழந்து, கால்களும் பாதிக்கப்பட்ட மாளவிகா ஐயர் தன்னம்பிக்கை பேச்சாளராகவும், மாற்றுத்திறனாளி ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். அத்துடன் இவர் மாடலிங்கும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#modi #twitter
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story