உனக்கு வேறொருத்தன் கேக்குதா.... திடீரென காணாமல் போன மனைவி! வீட்டில் உள்ள மரப்பெட்டியை உடைத்த போது சிமெண்ட்டுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி...... ஆக்ரோஷத்தில் கணவன் செய்த கொடூரம்..!!!
சூரத்தில் மனைவியை சந்தேகித்து கொலை செய்த கணவன், உடலை சிமெண்ட் பூசப்பட்ட பெட்டியில் மறைத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கணவன் ஒருவர் அவரை கொலை செய்து உடலை மறைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 39 வயதான விஷால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகராறு தீவிரமடைந்தது எப்படி?
சூரத்தைச் சேர்ந்த விஷால் மற்றும் ஷில்பா தம்பதியருக்கு 13 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். தகவலின்படி, ஷில்பாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக விஷால் சந்தேகித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு கட்டத்தில் மோதல் கடுமையாகி, விஷால் தனது மனைவியை கொடூரமாக தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடலை மறைக்க தீட்டிய திட்டம்
கொலைக்குப் பிறகு தப்பிக்க முயன்ற விஷால், உடலை மறைக்க திட்டமிட்டார். அதன்படி, ஷில்பாவின் உடலை ஒரு மரப்பெட்டிக்குள் வைத்து, அதன் மீது மண் மற்றும் சிமெண்ட் பூசி முழுமையாக மூடியுள்ளார். வெளியே பார்த்தால் சாதாரண பொருளைப் போலவே தோன்றும் வகையில் அதை அமைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பெத்த 2 பிள்ளைகளை விட கள்ளக்காதலன் தான் முக்கியம்! 21 வயது இளம்பெண்ணின் காதல் கலவரம்! மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!!
மனைவி கொலை வழக்கில் கைது
இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து செயல்பட்டனர். சிமெண்ட் பூசப்பட்ட பெட்டியை கைப்பற்றி உடலை மீட்டனர். அதன்பின் விஷாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!