தேர்தல் முடிவில் பிரபல தொலைக்காட்சி நடத்திய கூத்து! கவர்ச்சி புயல் சன்னி லியோன் என்ன கேட்டுள்ளார் தெரியுமா?
sunny leone tweet about tv announcement about election result

இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்திய அளவில் பாஜக கூட்டணி 342 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற மாநில கட்சிகள் 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் பெரிதாக எங்குமே வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் இந்தியா முழுவதும் தேர்தல் முடிவுகளால் பரபரப்பாக இருந்த நிலையில் கவர்ச்சி புயல் சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எத்தனை ஓட்டுகளில் முன்னணியில் உள்ளேன் என பதிவிட்டிருந்தார்.
அதாவது தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில், அர்னாப் என்ற தொகுப்பாளர், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி தியோல் முன்னிலையில் உள்ளார் எனக் கூறுவதற்குப் பதிலாக சன்னி லியோன் முன்னிலையில் உள்ளார் எனத் தவறுதலாகக் கூறியுள்ளார். இதனை கிண்டல் செய்யும் விதமாகவே அவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.