×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கறிக்கடைக்காரர், 3 குழந்தைகளை கொன்று மனைவியுடன் தற்கொலை.! அதிர்ச்சி காரணம்.!

கறிக்கடைக்காரர், 3 குழந்தைகளை கொன்று மனைவியுடன் தற்கொலை.! அதிர்ச்சி காரணம்.!

Advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பகுதியில் சதாசிவ நகரை சேர்ந்த கரீப் சாப் என்பவருக்கு சுமையா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். அவர் கறிக்கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில் அவருக்கு குடும்பம் நடத்த தேவையான பொருளாதார வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் இருந்து 1 லட்ச ரூபாயை கடனாக பெற்றுள்ளார். அவர் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கிய நிலையில் கடன் தொல்லை அதிகரிக்க துவங்கியது. கறிக்கடையிலும் தேவையான அளவு வருமானம் இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் கரீப் இருந்து வந்துள்ளார்.

இதை தனது மனைவியிடம் கூறிய போது இருவரும் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு குழந்தைகள் 3 பேருக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். குழந்தைகள் இறந்த பின்னர், தாங்களும் தூக்கில் தொங்கி உயிரை விட்டனர். 

உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக தாங்கள் எடுத்த முடிவு குறித்து ஒரு வீடியோ எடுத்து அதை தனது உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குடும்பத்தோடு வறுமையினால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #Women #Deatg #Wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story