×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

11 வயது மாணவிக்கு மூன்று நாட்களாக பயங்கர தலைவலி! ஸ்கேன் செய்து பார்த்ததில் நொறுங்கிருந்த... டீச்சர் தான் இதுக்கு காரணம்! அதிர்ச்சி சம்பவம்.!

சித்தூரில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் தண்டனை காரணமாக மண்டை ஓடு எலும்பு முறிவு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement

ஆந்திரப் பிரதேசத்தில் மாணவியின் மீது நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கல்வி துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வகுப்பறையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

மாணவிக்கு ஏற்பட்ட தாக்கம்

சித்தூர் மாவட்ட புங்கனூரைச் சேர்ந்த 11 வயது சாத்விகா நாகஸ்ரீ, 6ஆம் வகுப்பு மாணவி ஆவார். வகுப்பறையில் தவறாக நடந்துகொண்டதற்காக இந்தி ஆசிரியர் ஒருவர் பள்ளிப் பையால் அடித்து தண்டனை அளித்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அவரது தாயார் விஜேதா, இது வழக்கமான தண்டனை என்று கருதி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

உடல்நிலை மோசமடைந்தது

சம்பவத்திற்குப் பிறகு நாகஸ்ரீக்கு தொடர்ந்து தலைவலி ஏற்பட்டது. இதனால் அவர் மூன்று நாட்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. பெற்றோர் கவலைக்கிடமாக புங்கனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவ பரிசோதனையில் அவரது மண்டை ஓடு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: 10 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்ற அரசு பள்ளி ஹெட் மாஸ்டர்! மூக்கில் இருந்து வழிந்த ரத்தம்! தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி....

மருத்துவ சிகிச்சையும் புகாரும்

மாணவியின் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். காயத்தின் தீவிரம் உறுதி செய்யப்பட்டதால், நாகஸ்ரீயின் குடும்பத்தினர் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆசிரியர்களின் பொறுப்புணர்வு குறித்த விழிப்புணர்வு அவசியம் என்பதைக் காட்டும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

 

இதையும் படிங்க: 1000 இல்ல 2000 இல்ல மொத்தம் 35 லட்சம்! சொந்த வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணத்தை திருடிய 14 வயது மாணவன்! அதிரவைக்கும் காரணம்....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சித்தூர் #School Incident #ஆசிரியர் தண்டனை #Student Injury #tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story