×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கண்டித்ததால் ஆத்திரம்.. பள்ளி ஊழியரின் எலும்பில் தாக்கிய மாணவர்.. அதிர்ச்சி வீடியோ.!

ஆந்திர மாநிலத்தில் பள்ளி ஊழியரை மாணவர் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மாணவர்களின் ஒழுக்கம் குறித்து கவலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பள்ளி ஊழியரை மாணவர் தாக்கிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதும், ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதும், கெட்ட வார்த்தைகள் பேசுவதுமாக பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இது தொடர்பான வீடியோக்களை காணும் பெற்றோர்களும், மக்களும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து கவலைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

ஊழியரை தாக்கிய மாணவர்:

ஆனால் சில மாணவர்களுக்கு இதுதொடர்பான எந்தவொரு கவலையுமின்றி தான் நினைப்பதை செய்து முடிக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அந்த வகையில் மாணவர் ஒருவர் ஆசிரியரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் பாபுலபாடு, வீரவல்லி ஜில்லா, பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

எலும்பில் தாக்குதல்:

இவர் தீய பழக்கங்களுக்கு அடிமையானதாக கூறப்படும் நிலையில், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர் மாணவரை கண்டிக்க முயன்றுள்ளார். வகுப்பறையில் வைத்து ஆசிரியை முன் கண்டிக்க முயன்ற போது கோபமடைந்த மாணவர் அவரை எலும்பில் வேகமாக குத்தி கடுமையாக தாக்கியுள்ளார். மீண்டும் அவரை தாக்க முயன்ற போது சக மாணவர்கள் அவரை கட்டுப்படுத்தி உள்ளே அழைத்து சென்றுள்ளனர். 

வைரலாகும் வீடியோ:

இதனை தொடர்ந்து பலரும் வீடியோ எடுப்பதை உணர்ந்த மாணவர் தனது தவறை உணராமல், ஊழியரின் மீது பழிபோட நினைத்துள்ளார். அதன்படி தனது தாயை ஊழியர் திட்டியதாகவும் அதன் காரணமாக தான் அவரை அடித்ததாகவும் வாக்குவாதம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andhra school incident #student attack teacher #Trending #viral video #Andhra Pradesh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story