×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெத்த அம்மான்னு கூட பாக்கல...! நீயெல்லாம் ஒரு புள்ளையா? பெற்ற தாயின் தொண்டையை அறுத்துக் கொன்ற கல்லூரி மாணவன்..! நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்..!!!

காசிபேட்டை பாலாஜிநகரில் தகராறில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் துரைபாபு, தாயை கத்தியால் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

காசிபேட்டை பாலாஜிநகரில் தாயுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர், கத்தியால் தாக்கி அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக ஏற்பட்ட பிரச்சனைகளே இதற்கு பின்னணியாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தாயுடன் ஏற்பட்ட தகராறு

பாலாஜிநகரில் வசித்து வந்தவர் உதயஸ்ரீ. இவரது மகன் துரைபாபு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். துரைபாபுவின் தொடர் தவறான நடத்தைகள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பிளான் போட்டு நாடகம் ஆடுறாங்க.. 22 நாட்களாக கோமாவில் இருக்கும் இளம்பெண்! லிவ்-இன் பார்ட்னர் தான் இதுக்கு காரணம் ..! குடும்பத்தினரின் பரபரப்பு குற்றச்சாட்டு..! நடந்தது என்ன? பகீர் வீடியோ....!!!

கத்தியால் தாக்கி கொலை

இந்த நிலையில், தாயாருக்கும் துரைபாபுவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த துரைபாபு, கத்தியால் தனது தாயின் தொண்டையை அறுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த உதயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

துரைபாபு கைது; போலீசார் விசாரணை

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, தாய் கொலை தொடர்பாக துரைபாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறு மற்றும் கொலைக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பாலாஜிநகர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நர்சிங் மாணவி..! பக்கத்து வீட்டு பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்... பார்த்து கதறி துடித்த தாய்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#காசிபேட்டை கொலை #Balajinagar murder #தாய் கொலை #துரைபாபு கைது #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story