×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நேரலை அதிர்ச்சி காட்சி! 3 பந்தல 6 ரன்கள் எடுத்த பேட்ஸ்மென்! திடீரென மயங்கி விழுந்து மரணம்.... நெஞ்சை பதற வைக்கும் காட்சி!!!

இலங்கையின் பெருவளையில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க கிரிக்கெட் போட்டியில் 46 வயது வீரர் பேட்டிங் செய்தபோது திடீரென மயங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இலங்கையின் பெருவளை பகுதியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்கத்தின் கிரிக்கெட் திருவிழா எதிர்பாராத சோகத்தில் முடிந்தது. போட்டியின் போது பேட்டிங் செய்துகொண்டிருந்த 46 வயது வீரர் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததால், அதற்கான காட்சிகளும் பதிவாகியுள்ளன.

பேட்டிங் செய்தபோது திடீர் சரிவு

தகவலின்படி, கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் கிரீஸில் இருந்த அந்த வீரர் மூன்று பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 6 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென பிட்சிலேயே சுருண்டு விழுந்ததாக நேரில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் உயிரிழப்பு உறுதி

வீரர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, மாரடைப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க: நம்பவே முடியல... மேடையில் பேசிக்கொண்டிருந்த 24 வயது இளம் பெண்! திடீரென சரிந்து விழுந்து மயங்கி.... அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி..!!

எஞ்சிய போட்டிகள் ரத்து

மைதானத்திலேயே சக வீரர் உயிரிழந்த சம்பவம் வீரர்கள், நடுவர்கள் மற்றும் போட்டியை கண்டுகளித்த ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, போட்டி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிரிக்கெட் தொடரின் எஞ்சிய அனைத்து போட்டிகளையும் ரத்து செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் டான்ஸ் ஆடும் போதே சரிந்து விழுந்த நபர்... அடுத்த நொடி வந்த திடீர் மரணம்! பகீர் வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sri Lanka Cricket #பெருவளை #heart attack #கிரிக்கெட் போட்டி #Live Streaming
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story