சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.!
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.!
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நல பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயிற்று மற்றும் சிறுநீரக தொற்று தொடர்பான பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்பும் காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து ராகுல் காந்தி தனது கேரளா பயணத்தை ரத்து செய்து டெல்லியிலேயே தங்கினார். “ஒரு மகனாக தாயின் அருகில் இருப்பது முக்கியம்” என அவர் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: BREAKING: இன்று காலை நல்லகண்ணுக்கு திடீரென மூச்சுத்திணறல்! மீண்டும் உடல்நிலை பின்னடைவால் மருத்துவமனையில் அனுமதி!
மேலும், தாயின் உடல்நிலை குறித்து கவலையில் இருந்தபோது, கேரளாவை சேர்ந்த ஒரு நர்ஸ் தொடர்ந்து கவனித்தது தமக்கு ஆறுதலாக இருந்ததாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் எச்.ராஜா! நேரில் சென்று நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி..!!