×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏழை வியாபாரியின் காய்கறி கடையை சூறையாடிய பணக்கார பெண்.. இது தான் காரணமா.?! 

ஏழை வியாபாரியின் காய்கறி கடையை சூறையாடிய பணக்கார பெண்.. இது தான் காரணமா.?! 

Advertisement

சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு பெண்ணின் ஈவு இரக்கமற்ற செயல் பலரிடமும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோரத்தில் காய்கறி விற்று குடும்பத்தை நடத்தி வந்த ஒரு ஏழை வியாபாரி தினமும் அங்கு வந்து விற்பனை செய்து அவருடைய வாழ்க்கையை நடத்தி கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில், அங்கு வசிக்கும் ஒரு பெண் திடீரென வந்து அவரது காய்கறிகளை தூக்கி வீசியுள்ளார்.

தன் வீட்டின் பின்னால் இருக்கும் இந்த வியாபாரம் தனது பங்களாவின் அழகை கெடுக்கிறது என்பதே அந்த பெண்ணின் குற்றச்சாட்டாக இருக்கிறது. பலமுறை எச்சரித்தும் அந்த வியாபாரி இடம் மாற்றவில்லை என அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், காய்கறிகளை சாலையில் தூக்கி வீசி கடையை முற்றிலும் சேதப்படுத்தியதாக தெரிகிறது.
 

இதையும் படிங்க: மனைவியை கண்முன் ஆதாரமாக நிறுத்தி நடந்ததை புட்டு புட்டு வைத்த நாஞ்சில் விஜயன்! மனைவி இப்படி சொல்றாங்க... வைரலாகும் காணொளி!

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏழைகளின் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற கருத்துகள் அதிகமாக பதிவாகின்றன. இது போன்ற செயல்கள் சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஒருவரின் வாழ்வாதாரத்தை இவ்வாறு அழிப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த சம்பவம் சட்ட ரீதியாகவும் கவனிக்கப்பட வேண்டும் எனவும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ரயிலில் பேண்ட் ஜிப்பை கழற்றி பிறப்புறுப்பை வெளிப்படுத்தி ஆபாச சைகை செய்த நபர்! காமக்கொடூரனின் முகத்திரையைக் கிழித்த இளம்பெண்.... பகீர் வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Women #vegetable vendor #Social media
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story