×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புற்களுடன் சேர்ந்து கழுதையின் வாய்க்குள் சிக்கிய பாம்பு..! இரண்டுக்கும் இடையே நடந்த உயிர் போராட்டம்..! அதன்பின் நடந்த சோகம்.!

Snake comes with grass in donkeys mouth know what happened then

Advertisement

கழுதையின் வாயில் சிக்கிய பாம்பு ஒன்று வெளியே வர துடிக்கும் காட்சிகளும், பாம்பை வெளியே அனுப்ப போராடும் கழுதையின் முயற்சியும் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையின் அருகே இருந்த புற்களை கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்த போது புற்களின் மேல் இருந்த பாம்பு ஒன்று கழுதையின் வாய்க்குள் சிக்கியுள்ளது. 

பாம்பின் நடு பகுதி கழுதையின் வாயில் மாட்டிக் கொண்ட நிலையில் கழுதையின் வாயிலிருந்து பாம்பு வெளியே வர போராடுகிறது, அதேநேரம் கழுதையின் வாய்க்குள் பாம்பு மாட்டிக்கொண்டதால் கழுதையாலும் பாம்பை வெளியே துப்ப முடியவில்லை. 

ஒரு கட்டத்தில் பாம்பு கழுதையை பலமுறை கொத்திய நிலையில் கழுதையும், பாம்பும் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த சிலரால்வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video #snake #Donkey
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story