"பாலியல் குற்றவாளியை காட்டி கொடுத்த அக்கா... " மேற்கு வங்க கூட்டு பலாத்கார வழக்கில் திருப்பம்.!!
பாலியல் குற்றவாளியை காட்டி கொடுத்த அக்கா... மேற்கு வங்க கூட்டு பலாத்கார வழக்கில் திருப்பம்.!!
மேற்குவங்கம் துர்காப்பூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் படிக்கும் ஒடிசாவை சேர்ந்த மாணவி வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நபர்கள் மாணவியின் செல்போனை பறித்து அவரது நண்பரை அழைக்கச் சொல்லி கேட்டுள்ளனர். நண்பர் அங்கு வராததால் அதை தம் வசப்படுத்திய நபர்கள் சிறுமியை காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக துன்புறுத்தியுள்ளனர். நீ கத்தினால் இன்னும் ஆட்களை அழைப்போம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவியை வன்கொடுமை செய்த நபர்கள் மாணவியை விட்டுவிட்டு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக போலீஸுக்கு புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியாசுதீன், அபு பாரூய், ஃபிர்தவ்ஸ் மற்றும் முக்கிய குற்றவாளியான சஃபிக் ஆகியோரரை கைது செய்தனர். இதில் சஃபிக் தப்பியோடிய நிலையில் அவரது சகோதரி ரோசினா காவல்துறைக்கு உதவி செய்து பாலத்தின் அருகே தம்பியை சந்திக்க வருமாறு கூறி குற்றவாளியை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
இதையும் படிங்க: நெஞ்சமே பதறுதே... 1 வயது குழந்தை பலாத்காரம்.!! 32 வயது நபர் வெறி செயல்.!!
குற்றம் செய்தவர் தம்பியாக இருந்த போதும் போலீசில் பிடித்துக் கொடுத்த பெண்ணிற்கு காவல்துறை மற்றும் பொதுமக்களிடமிருந்து வெகுவான பாராட்டுக்கள் வந்த வண்ணமுள்ளது. இந்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 18 வயது மருத்துவக் கல்லூரி மாணவி பலாத்காரம்... வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்.!!