இந்த வயதிலேயே இப்படி நடக்கணுமா..?.. 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்...!!
இந்த வயதிலேயே இப்படி நடக்கணுமா..?.. 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்...!!
குடகு மாவட்டத்தில் 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆற்றியுள்ளது.
குடகு மாவட்டம் குஷால் நகர் தாலுகா கூடு மங்களூர் பகுதியில் வசித்து வருபவர் மஞ்சாச்சாரி. இவர் ஒரு தனியார் பள்ளியில் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் கீர்த்தன் (12) அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
திடீரென இரவு கீர்த்தனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே சிறுவனின் பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் கீர்த்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆஸ்பத்திரியில் கீர்த்தனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறினர். 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.