×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இறைவா என்ன இது? லைக்ஸ், வியூஸ்க்காக இப்படியா? உயிருடன் விளையாட்டு.. ஷாக் வீடியோ.!

சோசியல் மீடியா மோகம் பலருக்கு புதிய வாழ்க்கையை தந்தாலும், விரைவில் முன்னேற வேண்டும் என நினைத்து சிலர் செய்யும் விஷமத்தனம் அவர்களின் உயிருக்கும் எமனாக முடிந்து விடுகிறது.

Advertisement

வியூஸ், லைக்குகளுக்காக இளைஞர்கள் தங்களின் உயிரை பணயம் வைக்கும் செயல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் சோசியல் மீடியாவின் தாக்கம் என்பது கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் மிகப்பெரிய மாற்றம் கண்டது. கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த பலரும் தங்களின் நேரத்தை செலவழிக்க வீடியோ பதிவு செய்ய தொடங்கி, தற்போது சமூக வலைத்தளத்தில் பிரபலமாக அறியப்படும் நபர்களாக இருக்கின்றனர். இது பலரின் வாழ்க்கை பயணத்தை புதிய பாதையில் அழைத்து சென்றாலும், ஒருசிலருக்கு அதுவே எமனாக மாறுகிறது.

லைக்ஸ் மோகம்:

தங்களின் வீடியோ ட்ரெண்டிங்கில் இடம்பெற வேண்டும் என ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த திறமையை வெளிப்படுத்தி, அதில் பார்வையாளர்களை கவர்கின்றனர். இதற்காக ஒருசிலர் தொழில்முறை பயிற்சி எடுத்து சாகசம் செய்தாலும், வெகுசிலர் ஆர்வக்கோளாறு முறையில் அதனை கையாளுகின்றனர். இதனால் ஒருசில நேரம் உயிர் பறிபோகும் அபாயமும் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து உயிரிழந்த நபர்கள் மற்றும் கை-கால்களை இழந்தவர்கள் ஏராளம் என்றும் கூறலாம்.

இதையும் படிங்க: கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யுற இடமா அது! ஜோடியின் முத்தத்துல மொத்தமும் போய்டும் போல.... தலைக்கு மேல் சென்ற ரயில்! அதிர்ச்சி வீடியோ..!!!

அதிர்ச்சி வீடியோ வைரல்:

இதனிடையே, இதேபோன்ற ஒரு சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. தனது பார்வையாளரை கவர பிரபலம் ஒருவர் லாரியின் பின்சக்கரத்துக்கு அடியில் ஸ்கேட்டிங் வீல் அணிந்தபடி பயணம் செய்த பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. விபரீதமான இந்த சர்ச்சை செயலை செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற விஷயங்களை யாரும் பின்பற்ற கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trending #Vira video #ட்ரெண்டிங் #வைரல் வீடியோ
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story