நீங்கயெல்லாம் பொண்ணுங்க தானா? இளைஞருடன் பேச மறுத்த பெண்ணை... தனியாக அழைத்து சென்று 4 கல்லூரி மாணவிகள் செய்த கொடூரம்! வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்ட அசிங்கம்... பகீர் சம்பவம்!!!
மத்திய பிரதேசம் சத்னாவில் இளைஞருடன் பழக மறுத்த கல்லூரி மாணவியை 4 தோழிகள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. வீடியோ பரவியதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழிகள் 4 பேரால் தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். தன்னுடன் பழகுமாறு தொடர்ந்து வற்புறுத்திய இளைஞருடன் பேச மறுத்ததால் மாணவி தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செப்டம்பர் 6-ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்றதாக புகார்
புகாரின்படி, சந்தைக்கு செல்வதாகக் கூறி தோழி ஒருவர் மாணவியை ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சத்னாவில் உள்ள தனிமையான பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு ஏற்கெனவே 3 மாணவிகள் இருந்ததாகவும், அவர்கள் முகத்தை துணியால் மறைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தையை நோக்கி பாய்ந்த பிட்புல் நாய்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 மாத பிஞ்சு.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ!
அதன்பின் 4 பேரும் சேர்ந்து மாணவியை கையாலும் காலாலும், குச்சியாலும் தாக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், மாணவிக்கு பிடிக்காத இளைஞருடன் வீடியோ அழைப்பில் பேச வைத்து மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
வீடியோ மூலம் குடும்பத்தினருக்கு தெரியவந்தது
தாக்குதலுக்குப் பிறகு அச்சமடைந்த மாணவி உடனடியாக யாரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்று அவரது உறவினர் ஒருவரிடம் கிடைத்துள்ளது. இதையடுத்து குடும்பத்தினருக்கு தகவல் தெரியவந்த நிலையில், செப்டம்பர் 11-ஆம் தேதி மாணவி தனது குடும்பத்தினருடன் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
4 மாணவிகள் மீது வழக்குப்பதிவு
புகாரைத் தொடர்ந்து கோலக்வான் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மாணவியின் வாக்குமூலம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தாக்குதல் வீடியோ ஆகியவற்றை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் 4 மாணவிகள் மீதும் பெயருடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த கொடூர சம்பவம்.. வெளியான சிசிடிவி காட்சியால் பெங்களூருவில் அதிர்ச்சி!