×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

106 வயதில் 385 ஆல மரங்களை நட்டு வளர்த்து மூதாட்டி சாதனை; உங்களால் முடியுமா?

saalumaradha dimmaka planted 385 banyan trees

Advertisement

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாலுமரத திம்மக்கா என்ற 106 வயது மூதாட்டி தன் வாழ்நாளில் இதுவரை 385 ஆலமரங்களை நட்டு வளர்த்துள்ளார். இவருக்கு மத்திய அரசு தற்போது பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பசுமை ஆர்வலர் மற்றும் செயல்பாட்டாளர் சாலுமரத திம்மக்கா. கர்நாடக மாநில நெடுஞ்சாலையில் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு ஏறக்குறைய 385 ஆலமரங்களை இவர் நட்டுப் பராமரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது இப்பணிக்காக இந்திய அரசு ஏற்கனவே இவருக்கு தேசிய குடிமகன் விருது வழங்கியுள்ளது.

திம்மக்கா கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூரில் பிறந்தவர். பெங்களூர் கிராமப்புற மாவட்டத்தில் உள்ள ஹுலிகல்லு எனும் ஊரினரான சிக்கையா என்பவரை மணமுடித்து அந்த ஊருக்கு இடம் பெயர்ந்தார். இளம் வயதில் திருமணம் செய்த திம்மக்கா, திருமணமாகிப் பல வருடங்களாகியும் மக்கட்பேறு இல்லாததால் திம்மக்கா பொட்டல் காடாக இருந்த கூதூர்ச் சாலைகளின் இரு மருங்கிலும் ஆலமரக் கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார்.

படிப்பறிவே இல்லாத திம்மக்காவின் பெயரில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவில் இயங்கி வரும் சுற்றுச்சூழல் அமைப்பு கல்விக்கூடங்கள் இவரது பெயரில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவர் உமேஷ் என்பவரை தன் மகனாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

திம்மக்காவின் கணவர் 1991 இல் இயற்கை எய்தினார். திம்மக்கா இந்தியாவின் பல மரம் நடும் அமைப்புகளால் சிறப்பு விருந்தினராகவும் பயிற்சி அளிப்பதற்காகவும் அழைக்கப்படுகிறார். தனது சிற்றூரில் ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது அவரது கனவாக உள்ளது. பசுமை ஆர்வலரான திம்மக்காவிற்கு மத்திய அரசு இந்த வருடம் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #Saalumarada Thimmakka #banyan tree #bhartha ratna
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story