×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியை பார்க்க வந்த என்ஜினீயருக்கு கொரோனா பாதிப்பா! பரவி வந்த தகவல்! வெளியான உண்மை!

Rumour spread about corono for london return

Advertisement

நாகை மாவட்டம், குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் சூரியநாராயணன். இவரது மருமகன் ஆனந்த். 36 வயது நிறைந்த இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில்  என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக லண்டன் சென்ற அவர் கடந்த 8-ந் தேதி நாடு திரும்பியுள்ளார். பின்னர் தனது சொந்த ஊரான சென்னைக்கு சென்ற அவர் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக குத்தாலத்துக்கு வந்துள்ளார்.

இதற்கிடையே லண்டனிலிருந்து வந்த ஆனந்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வாட்ஸ்- அப்பில் வதந்தி பரவியுள்ளது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்த  மருத்துவ குழுவினர் அவரது வீட்டிற்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. மேலும் ஆனந்த், தன்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததாகவும், அதில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்ததையும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்திகள் பரவியது. இதனால் மனமுடைந்த ஆனந்த், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் வாட்ஸ்  அப்பில் வதந்தி பரப்பிய  கில்லி பிரகா‌‌ஷ் என்பவரை கைது செய்தனர்.

மேலும் குத்தாலம் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டது. இதில் கலந்து கொண்ட குத்தாலத்தை சேர்ந்த புகழேந்தி என்பவர் ஆனந்துக்கு கொரோனா தொற்று உள்ளது. அதனால் குத்தாலம் பகுதியில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஏலத்தை நிறுத்தும்படி பிரச்சினை செய்துள்ளார்.  இது குறித்து தகவலறிந்த ஆனந்த், புகழேந்தி மீதும் புகார் அளித்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coronovirus #london #rumour
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story