×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு கோவில் கட்டிய ஓய்வு பெற்ற ஆசிரியர்.! நாள்தோறும் வழங்கப்படும் பிரசாதம் என்ன தெரியுமா.?

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு கோவில் கட்டிய ஓய்வு பெற்ற ஆசிரியர்.! நாள்தோறும் வழங்கப்படும் பிரசாதம் என்ன தெரியுமா.?

Advertisement

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சிவதாசன் பிள்ளை. 71 வயது நிரம்பிய இவர் சமூக அறிவியல் ஆசிரியராக இருந்து பணிஓய்வு பெற்றவர். இவர்  இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு கோயில் கட்டியுள்ளார். அங்கு இந்திய அரசியலமைப்பின் முக்கிய தெய்வம் மற்றும் எப்போதும் ஒளிரும் எண்ணெய் விளக்கு மற்ற இந்து கோவில்களைப் போலவே தெய்வீகத்தன்மையாக திகழ்கிறது.

அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டிய கோவிலுக்கு நாள்தோறும் வருகை தரும் மாணவர்கள் இந்த கோவிலின் வழக்கமான பக்தர்களாக உள்ளனர். கோவிலுக்கு வரும் மக்களுக்கும் பிரசாதமாக "Constitution is lord and it is the prosperity of this house" என்று மலையாளத்தில் எழுதப்பட்ட ஸ்டிக்கரை வழங்குகிறார்.

இதுகுறித்து சிவதாசன் பிள்ளை கூறுகையில், என்னைப் பொறுத்தவரை, என் இறைவன் அரசியலமைப்பு சட்டம் தான். அதனை நான் வணங்குகிறேன். இது நமது நாட்டின் அடிப்படை, நமது சகோதரத்துவம், பன்முகத்தன்மை மற்றும் எதிர்காலம். நான் என் கடவுளின் கொள்கைகளை வளர்க்க விரும்புகிறேன், அதனால் நான் அதற்கு கோயில்  கட்டினேன் என தெரிவித்துள்ளார்

அவர் கட்டிய இந்த கோவிலில் மகாத்மா காந்தி, விவேகானந்தர், அம்பேத்கர், நோபல் பரிசுப் பெற்ற மலாலா யுசாஃப்சாய் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாதிரி ஆகியவற்றின் புகைப்படங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Retired social science teacher #Indian Constitution temple
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story