×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடியோ: மூன்று நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரியை மீட்டது எப்படி!! சுவாரஸ்யமான தகவல்கள்!!

recue of abilash tomy

Advertisement

படகு சவாரியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் டோணி . இவர் 'கோல்டன் குளோ'ப் என்ற சர்வதேச நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட கடல் வழியாக உலகை சுற்றி வரும் படகு போட்டியில் கலந்து கொண்டார்.

கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தைக் கடந்து தெற்கு இந்திய பெருங்கடலில் வந்துகொண்டிருந்தபோது கடந்த வெள்ளிக்கிழமை அவரது படகு ராட்சத அலைகளால் தாக்கப்பட்டது. இதனால் அவருக்கும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அவரால் நகர முடியவில்லை. மேலும் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் அவரால் மேற்கொண்டு படகை இயக்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடு கடலில் சிக்கிய அவர் உதவிக்கு யாரும் இல்லாமல் தனியாக மூன்று நாட்களாக தவித்து வந்துள்ளார். எனவே தனது நிலைமை குறித்து இந்திய கடற்படைக்கு குறுஞ்செய்தி மூலம் தகவலை தெரிவித்துள்ளார். இந்த தகவலை பெற்ற இந்திய கடற்படையினர் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் கடற்படையினரை உதவிக்கு அழைத்தனர்.

இந்நிலையில் இந்திய கடற்படையின் உதவியை ஏற்ற பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். பிரான்ஸ் கடற்கரையில் இருந்து சென்ற ஒசிரிஸ் என்ற கப்பல் அவர் இருக்குமிடத்திற்கு அருகில் சென்றது. ஆனால் அந்த நேரத்தில் வானிலை மிகவும் மோசமாக  இருந்ததால் டோணியின்  அருகில் சென்று அவரை மீட்க முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து இந்திய கடற்படையினர் விமானத்தின் மூலம் டோணி  இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அந்த இடமானது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 5,020 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக அறியப்பட்டது.

இதனையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய மூன்று கடற்படையினரும் முழுவீச்சில் இறங்கினர். இவர்களுடைய தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இறுதியாக பிரான்ஸ் நாட்டின் ஒசிரிஸ் கப்பல் இன்று அதிகாலை கமாண்டர் டோணி இருக்கும் இடத்திற்கு சென்று அவரை பத்திரமாக மீட்டது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#abilash tomy #tomy rescue videos #osiris boat
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story