×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் கைது...!

மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் கைது...!

Advertisement

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் தூக்கில் தொங்க விட்டு தற்கொலை போல் நாடகமாடிய கல்லூரி முதல்வரை காவல்துறையினர் கைது செய்தனர். 

கர்நாடக மாநிலத்தில் ராய்ச்சூர் மாவட்டம் கோனவட்லா கிராமத்தில் வசிக்கும் 18 வயது இளம் பெண் லிங்கசுகுர் நகரத்தில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் முதல் வருடம் படித்து வந்தார்.  கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கல்லூரியில் முதல்வராக இருக்கும் ரமேஷ் அந்த விடுதியின் வார்டனாகவும் இருந்து வந்துள்ளார். 

கடந்த 3-ஆம் தேதி இரவு விடுதியில் அவரது அறையில் அந்த மாணவி தூக்கில் சடலமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் லிங்க சுகுர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துரையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
தற்கொலை என்று வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் மாணவியின் பெற்றோர் தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக லிங்கசுகுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது.  அதன் பின்னர் லிங்கசுகுர் காவல்துறையினர் தற்கொலை வழக்கை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் கல்லூரி முதல்வராகவும் அந்த விடுதியில் வார்டனாகவும் இருக்கும் ரமேஷ் மாணவியை அடிக்கடி தனது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் வந்துள்ளார் என்று தெரியவந்தது.

கல்லூரி முதல்வரின் இந்த அத்துமீறலால் அந்த மாணவி இரண்டாம் ஆண்டு படிப்பை வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க முடிவு செய்தார்.  இதனால் சம்பவத்தன்று கல்லூரி முதல்வர் அந்த மாணவியை அவரது அறைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அது வெளியே தெரியாமல் இருக்க மாணவியை கொலை செய்து உடலை மாணவியின் அறைக்கு கொண்டு சென்று தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். அதன் பின்னர் காவல்துறையினர் ரமேஷை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர் ரமேஷை லிங்கசுகுர் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #karnataka #Rape the student Hanged #College principal Arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story