பெண் மருத்துவரை தொடர்ந்து மீண்டும் அரங்கேறிய சோகம்! 19 வயது இளம்பெண்ணை கடத்தி கற்பழித்து மரத்தில் தொங்கவிட்ட கொடூர சம்பவம்!
Rape kujaraath

குஜராத்தில் 19 வயது இளம்பெண்ணை 4 மர்ம நபர்கள் கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கற்பழித்து விட்டு மரத்தில் தொங்கவிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 19 வயது நிரம்பிய தலித் இளம்பெண் ஒருவர் கடந்த 31 ஆம் தேதி மாயமாகியுள்ளார். இதனால் பதற்றமான அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் விசாரனை ஈடுப்பட்ட போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது பிமல், தர்ஷன், சதீஷ் மற்றும் ஜிகர் ஆகிய 4 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்று கற்பழித்து கொலை செய்துள்ளனர்.
மேலும் அந்த தடயங்களை மறைக்க அந்த பெண்ணை அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்ற உண்மையும் வெளிவந்துள்ளது. அந்த நால்வர் மீதும் போலீசார் கடத்தல், கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனர்.