காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
ரஜினிகாந்தின் புதிய படம் கூலி படத்தின் இரண்டாவது பாடல் மோனிகா இன்று வெளியானது, மற்றும் ரசிகர்களிடம் வெற்றிகரமான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலில் பூஜா ஹெக்டே மற்றும் சௌபின் ஷாஹிர் நடனமாடியுள்ளனர்.
74 வயதிலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்கவைத்திருக்கும் ரஜினிகாந்த், இன்றும் பல பெரும் ஹிட் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் கடைசியாக நடித்த வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடியது.
கூலி படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 14 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: பன் பட்டர் ஜாம்.. அதிதி ஷங்கர் குரலில் வெளிவந்த காஜூமா பாடல்!! இணையத்தில் வைரல்.!
முன்னதாக வெளியான முதல் பாடல் போலவே, இப்போது வெளியான "மோனிகா" பாடலும் YouTube மற்றும் சமூக வலைதளங்களில் விரைவாக பரவிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் இந்த பாடலின் மெட்டும், நடனக் காட்சிகளையும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் இசை ரசிகர்களிடையே இந்த பாடல் ஒரு ஹிட் ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நடிகர் விஜய் ஆண்டனிக்கு இப்படியொரு வித்தியாசமான பழக்கமா?? அதற்கு இதுதான் காரணமா!! அவரே சொன்ன விளக்கம்!!