×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்த சோகம்.!

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்த சோகம்.!

Advertisement

கூட்டுப்பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நடந்துள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தில், பெண்மணி தனது கணவர் மற்றும் 15 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களின் சொந்த ஊர் அதே மாவட்டத்தில் உள்ள சிவம் என்ற கிராமம் ஆகும். குடும்பத்தினர் பிழைப்புக்காக பார்மருக்கு வந்துள்ளனர். 

இந்த நிலையில், 15 வயது சிறுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பெற்றோர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மரணத்திற்கு முன்னர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். 

அந்த கடிதத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக என்னை வீட்டில் இருக்கும் போது, அப்பகுதியை சார்ந்த இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், என்னை மிரட்டி அவரது நண்பர்கள் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தார்கள். 

என் வாழ்க்கையில் நடந்த துயரத்தை என்னால் மறக்க முடியவில்லை. இதனால் என் முடிவை நான் தேடிக்கொள்கிறேன். அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தாருங்கள் என்று கூறியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajasthan #Minor Girl #sexual abuse #police #Investigation #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story