×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

17 வயது சிறுமி 3 பேர் கும்பலால் பலாத்காரம்; பல்கலை., மாணவர்கள் வெறிச்செயல்; குற்றவாளிக்கு மாவுக்கட்டு.!

17 வயது சிறுமி 3 பேர் கும்பலால் பலாத்காரம்; பல்கலை., மாணவர்கள் வெறிச்செயல்; குற்றவாளிக்கு மாவுக்கட்டு.!

Advertisement

 

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்புர் ஜே.என்.வி.யு பல்கலைக்கழகத்தில் மாணவராக படிப்பவர் சம்மந்தர் சிங், அஜ்மீரை சேர்ந்த பட்டதாரி தரம் பால் சிங், பி.எட் பட்டதாரி பட்டம் சிங். இவர்களின் வயது 20 முதல் 22 ஆகும்.

சம்பவத்தன்று பல்கலை.,யில் பயின்று வரும் மாணவர் ஒருவர், தனது 17 வயது காதலியுடன் கல்லூரி வளாகத்தில் இருந்ததாக தெரியவருகிறது. இருவரும் இரவு நேரத்தில் சந்தித்துள்ளனர். 

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மேற்கூறிய மூன்று பேர், சிறுமியை ஆண் நண்பரிடம் இருந்து பிரித்து பலாத்காரம் செய்துள்ளனர். அதாவது, ஆண் நண்பரை மிரட்டி, அவரை சரமாரியாக தாக்கி பின் சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றனர். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆண் நண்பர் பொதுமக்கள் உதவியுடன் காலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இரவில் தனியே சிக்கிய சிறுமியிடம் கும்பல் அத்துமீறி இருக்கிறது. 

தகவல் அறிந்த காவல் துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று 3 கயவர்களையும் கைது செய்தனர். இவர்களில் அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பி செல்ல முயன்று வழுக்கி விழுந்து காயமும் அடைந்தனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajasthan #Jaipur #India #Rape
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story