×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்பமா இது? மருமகளை நாளுக்கு நாள் செய்த சித்திரவதை! கருகலைக்க மாத்திரை,மூடநம்பிக்கை, சூனியம்... இறுதியில் பெட்ரோல் ஊத்தி தீ வைத்து... குலை நடுங்க வைக்கும் பயங்கரம்..!!!

ராஜஸ்தானில் வரதட்சணை மற்றும் மூடநம்பிக்கை கொடுமையால் பெண்ணுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக புகார் எழுந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் வரதட்சணைக் கொடுமை மற்றும் மூடநம்பிக்கை சித்திரவதை தொடர்பாக அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கொர்வா கிராமத்தைச் சேர்ந்த 40 வயது ஹீனா பெஹ்ல், பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் 90 சதவீதம் தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வரதட்சணை கேட்டு தொடர்ந்து சித்திரவதை

கடந்த 2012-ஆம் ஆண்டு பகவானாராம் பெஹ்லை ஹீனா திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் தொடக்கத்தில் சுமுகமாக இருந்த மாமியார் வீட்டினர், பின்னர் கார் உள்ளிட்ட வரதட்சணைப் பொருட்களை கேட்டு ஹீனாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சொத்தைக் கைப்பற்றும் நோக்கத்திலும் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: திருமணமான சில மாதங்களில் மாமனார் வீட்டில் 22 வயது இளம்பெண் மரணம்! நடந்தது என்ன? கதறும் குடும்பத்தினர்...!!!

குழந்தை பிறக்காமல் தடுப்பதற்கும், கருவைக் கலைப்பதற்கும் ஹீனாவுக்குத் தெரியாமல் சில மருந்துகள் கொடுக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி, உள்ளூர் வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று சூனியச் சடங்குகள் உள்ளிட்ட மூடநம்பிக்கை நடவடிக்கைகளுக்கும் அவரை உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராட்டம்

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி ஹீனா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது. பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் முதலில் ஜெய்சல்மீர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த ஹீனா, வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அளித்த புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கணவர் உள்ளிட்ட 4 பேர் கைது

ஹீனாவின் தந்தை புர்காராம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் பகவானாராம், மாமனார் சோனாராம், மாமியார் லஸ்மோ தேவி மற்றும் நாத்தனார் அம்ரிதா தேவி ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். வரதட்சணைக் கொடுமை, தீவைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் மூடநம்பிக்கை சித்திரவதை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: தலை விரித்தாடும் சித்திரவதை... கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவன்! திருமணமான 19 நாட்களில் பி.டெக் மாணவி எடுத்த விபரீத முடிவு! நெஞ்சை உலுக்கும் சோகம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ராஜஸ்தான் பெண் #Dowry harassment #ஹீனா பெஹ்ல் #Jaisalmer Crime #மூடநம்பிக்கை கொடுமை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story