கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து.. மருத்துவர் உட்பட குடும்பமே என 5 பேர் பலி.!
கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து.. மருத்துவர் உட்பட குடும்பமே என 5 பேர் பலி.!
சுற்றுலா சென்று வீட்டிற்கு வரும் போது ஏற்பட்ட விபத்தில் மருத்துவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் மாவட்டம், அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுபவர் சதீஷ் போனியா. இவர் தனது குடும்பத்தாருடன் மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று காரில் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இவர்களின் கார் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரூபநகர் பகுதி அருகே வருகையில், எதிர்திசையில் வந்த தனியார் பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. பேருந்தில் மோதியவாறே கால்வாயிலும் விழுந்துள்ளது.
கால்வாயில் நீரும் சென்றுகொண்டு இருந்த நிலையில், மருத்துவர் சதீஷ், மனைவி சரிதா, மகன் ராஜா, உறவினர்கள் ராஜேஷ் உட்பட 5 பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், 2 பேரின் உடல் கிடைக்கவில்லை. அவர்களின் உடல் தேடப்பட்டு வருகிறது.