5 நாட்களுக்கு கனமழை! மீண்டும் வெளியான வானிலை ஆய்வு மைய்ய ரிப்போர்ட்!
Rain update for next 5 days in tamilnadu

கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக விடியற்காலையில் மழை தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை இருக்க கூடம் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மஹி ஆகிய பகுதிகளில் நவ.,28 முதல் டிச.,2 ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.