திக் திக் காட்சி! நடுரோட்டுல கயிறோட கைதி செய்த அதிர்ச்சி செயல்! போலீஸையே அதிரவைத்த கைதி.. மரண பயத்தை காட்டிய என்கவுண்டர் வீடியோ...!!!
பஞ்சாப் ஹோஷியார்பூரில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அழைத்து செல்லப்பட்ட கைதி, போலீஸ்காரரை தாக்கி தப்பியோட முயன்றபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர், போலீஸ்காரரை தாக்கி தப்பியோட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலின் போது துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து கைதி உயிரிழந்தார். காயமடைந்த காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனை முடிந்து திரும்பியபோது தாக்குதல்
தகவலின்படி, நசீப் சிங் என்ற கைதி மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரை, காவலர் ஜஸ்தீப் சிங் ஈ-ரிக்ஷாவில் சிறைக்குத் திரும்ப அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்த நசீப் சிங், காவலரை சரமாரியாக தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடுரோட்டில் பரபரப்பான மோதல்
இருவரின் கைகளும் கயிற்றால் இணைக்கப்பட்டிருந்த நிலையிலும், தாக்குதலைத் தடுக்க காவலர் கடுமையாக போராடினார். இதனால் இருவரும் சாலையிலேயே கீழே விழுந்து சண்டையிட்டனர். அந்த நேரத்தில் காவலரின் துப்பாக்கியைப் பறிக்கவும் கைதி முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோதலின் போது துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்ததில், நசீப் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முகம் மற்றும் உடலின் பல பகுதிகளில் காயமடைந்த ஜஸ்தீப் சிங் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சிசிடிவி காட்சிகள் வைரல்
கைதியிடம் கூர்மையான ஆயுதம் எப்படிக் கிடைத்தது, யாராவது வெளியில் இருந்து உதவி செய்தார்களா என்பது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் நடந்த இந்த மோதலின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: தகாத வார்த்தைகளை தாங்க முடியாமல் எதிர்த்து பேசிய பெண்! நிமிடத்தில் அரங்கேறிய அட்டூழியம்..... அதிர்ச்சி சிசிடிவி வீடியோ!!!