×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

40 வயது நபரின் வயிற்றில் இயர்போன், வயர், இரும்பு & அலுமினியம், பிளாஸ்டிக் பொருட்கள்.. அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த மருத்துவர்கள்.!

40 வயது நபரின் வயிற்றில் இயர்போன், வயர், இரும்பு & அலுமினியம், பிளாஸ்டிக் பொருட்கள்.. அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த மருத்துவர்கள்.!

Advertisement

 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா மருத்துவமனையில், 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்ட 40 வயது நபருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். 

அப்போது, அவரின் வயிற்றில் இயர்போன், கயிறு, கீ செயின், சாவி, ஆணி, இரும்பு & அலுமினிய வளையங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் இருந்துள்ளன. 

இதனை எக்ஸ்-ரே மூலமாக உறுதி செய்த மருத்துவர்கள், அனைத்தையும் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டவர் உடல்நிலை சற்று தேறி வந்தாலும், ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபருக்கு தனது உயிருக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை தேர்வு செய்து சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. 

அதுவே இன்று அவரின் உயிருக்கு எமனாக அமைந்துள்ளது. இது ஒருவகை நோய். தற்போது அவரின் உடல்நலம் தேறி வருகிறது. அவரின் வயிற்றில் இருந்த அனைத்து பொருட்களும் மருத்துவகுழுவால் வெளியே எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#punjab #India #doctor
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story