சீறி பாயும் இந்திய போர் விமானங்கள்! போருக்கான ஆயத்தமா? வீடியோ!
Pulwama crpf camp attack 42 members killed

இந்தியாவையே சோகத்தில் புரட்டி போட்டுள்ளது புல்வாமா தாக்குதல். தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் இந்திய CRBF வீரர்கள் சென்ற ராணுவ வாகனம் மீது, வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை மோதவிடத்தில் இந்திய CRBF வீரர்கள் 42 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் இந்த மோதல் போக்கை எப்படி கையாளப்போகிறது என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
மேலும் இந்திய எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் அமெரிக்கா ஆதரவு தருவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய எல்லையில் இந்திய விமானப்படை வீரர்கள் மிகப்பெரிய அளவில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில், இந்தியா அணுகுண்டு சோதனை செய்த பொக்ரான் பகுதியில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. மின்னல் வேகத்தில் பாய்ந்த இந்திய போர் விமானங்கள் இலக்கை மிக சரியாக குறி வைத்து தாக்குதல் நடத்தியது இந்தியாவின் போர் வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது.
புல்வாமா தாக்குதலின் பதற்றம் இன்னும் குறையாத நேரத்தில், இந்திய போர் விமானங்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.