×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டெல்லியில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் - பிரியங்கா காந்தியின் பதிலால் ஷாக்கான தொண்டர்கள்.!

டெல்லியில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் - பிரியங்கா காந்தியின் பதிலால் ஷாக்கான தொண்டர்கள்.!

Advertisement


டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக 48 தொகுதிகளை கடந்து முன்னிலையில் இருக்கிறது. இதனால் 23 ஆண்டுக்கு பின் பாஜக அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கவில்லை நிலையில், கடந்த 2015 ல் இருந்து ஆட்சியை தக்கவைத்த ஆம் ஆத்மி கட்சி தனது ஆட்சியை இழக்கிறது. டெல்லி மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவியது. 

23 ஆண்டுகளுக்கு பின் பாஜக ஆட்சி

தேசிய அளவிலான கூட்டணியில், மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து பணியாற்றினாலும், மாநில தேர்தலில் இருதரப்பும் கருத்து முரண் காரணமாக தனியே களம்கண்டு மும்முனை போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியில் ஆம் ஆத்மி 22 சட்டப்பேரவை உறுப்பினர்களை தக்கவைத்து கொண்ட தோல்வியை எதிர்கொண்டாலும், காங்கிரஸ் கடந்த 2013 க்கு பின், தற்போது வரை (2015 மற்றும் 2020) நடைபெற்ற 3 சட்டப்பேரவை தேர்தலில், ஒரு உறுப்பினரை கூற பெறவில்லை. 

எனக்கு தெரியாது

இந்த விஷயம் தேசிய அளவில் கவனிக்கப்படுகிறது. இதனிடையே, டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசின் தோல்வி தொடர்பாக பிரியங்கா காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், "தேர்தல் முடிவை நான் பார்க்கவில்லை. எனக்கு எதுவும் தெரியாது" என கூறிச் சென்றார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வழியில் கவனிக்கப்படும் பிரியங்கா காந்தி, தேர்தல் தொடர்பாக பதில் அளிக்காமல், தெரியாது என கூறி சென்றது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஒரு நொடி நின்று வந்திருக்கலாமே.. 5 வயது சிறுவனுக்கு இப்படியா மரணம் வரணும்? பதறவைக்கும் வீடியோ.!

அதனைத்தொடர்ந்து, சில மணிநேரங்கள் கழித்து பதிலளித்த பிரியங்கா காந்தி, "மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்து இருக்கின்றனர் என்பது தெளிவாக புரிகிறது. வென்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மக்களின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து காங்கிரஸ் உழைக்கும்" என பேசினார்.

டெல்லியில் பாஜக ஆட்சி

மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைமையும், ஆம் ஆத்மி தோல்விக்கும்-தங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. நாங்கள் அதற்கு பொறுப்பேற்க மாட்டோம் என கைவிரித்துவிட்டது. இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டதால், வெற்றிவாய்ப்பு இழக்கப்பட்டதாகவும், ஏற்கனவே ஊழலை ஒழிப்பதாக களமிறங்கி, ஊழல் குற்றசாட்டில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் மீது மக்கள் ஆதங்கத்தில் இருந்த நேரத்தில், தனித்தனியே களம்கண்டது பாஜகவுக்கு வெற்றிவாகையை சூட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தூக்கில் துள்ளத்துடித்த உயிர்.. 5 நிமிடத்தில் இளம்பெண்ணை காப்பாற்றிய காவலர்கள்.. குவியும் பாராட்டுக்கள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Priyanka Gandhi #Delhi Elections #Delhi Election 2025 #rahul gandhi #Aam Aadmi Party
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story