×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

180 மாணவிகளின் தலைமுடியை வெட்டி எறிந்த தலைமை ஆசிரியர்.! வெளியான அதிர்ச்சி காரணம்!!

principal ordered to cut the hair of 108 students

Advertisement

தெலுங்கானா மாநிலம் மெலக் நகரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஏராளமான  மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவிகள் தங்கும் விடுதியும் உள்ளது.

இந்நிலையில் மாணவிகள் தங்கும் விடுதிய அமைந்துள்ள பகுதியில், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு 3 நாட்களுக்கு ஒரு முறை லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதியில் உள்ள மாணவிகளின் முடி மிகவும் நீளமாக இருப்பதால் தான் குளிப்பதற்கு அதிகமாக தண்ணீர் வீணாகிறது. அதனை மாணவிகளின் தலைமுடியை வெட்டிவிடுங்கள் என தலைமை ஆசிரியர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அங்கு பயின்ற 108 மாணவிகளின் தலைமுடி வெட்டப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து வாரவிடுமுறையில் மாணவிகளை பார்க்க வந்த பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் தலைமுடி வெட்டப்பட்டிருப்பதை கண்டு பெரும் ஆதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அனுமதியின்றி அத்துமீறிய செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியருக்கு எதிராக மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#haircut #school
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story