ஹெச். எம்-ஐ எதிர்த்து பேசியதால் 9ம் வகுப்பு மாணவியின் முடியை பிடித்து இழுத்து.... உன்னை கொல செய்துவிடுவேன்! பயத்தில் மாணவி.... வெளியான அதிர்ச்சி வீடியோ...!
உத்தரப் பிரதேச ஹாபூரில் முதல்வர் மாணவியை தாக்கி மிரட்டிய வீடியோ பரவி சர்ச்சை; பெற்றோர், மக்கள் கண்டனம், காவல்துறையினர் விசாரணை தீவிரம்.
உத்தரப் பிரதேசத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. ஹாபூரில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு பற்றிய அவசியத்தை தெளிவாக வெளிக்கொணர்கிறது.
மாணவியை தாக்கி மிரட்டிய முதல்வர்
ஹாபூர் மாவட்டத்தில் உள்ள வி.ஐ.பி. இன்டர் காலேஜ் பள்ளியின் முதல்வர் வீணா சர்மா, 9-ஆம் வகுப்பு மாணவியை தாக்கி, "உன்னைக் கொலை செய்துவிடுவேன்" என்று மிரட்டியதாக கூறப்படும் வீடியோ ஒருவர் வெளியீட்டின் பேரில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி புகார் மற்றும் குடும்பத்தின் குற்றச்சாட்டு
தோழியுடன் வகுப்பறைக்கு வெளியே நின்ற மாணவியிடம் முதல்வர் அங்கிருந்து செல்ல சொல்லியதும், உடனடியாக பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்து சடையைப் பிடித்து இழுத்துச் சென்றதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் மற்ற மாணவர்கள் மூலம் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
பயத்தில் உறைந்த மாணவி
வீடியோவில் முதல்வர் மிரட்டுவது தெளிவாகத் தெரியவரும் நிலையில், மாணவி கடும் பயத்தில் உறைந்துள்ளதோடு, பள்ளிக்குச் செல்லத் தயங்குவதாகவும், மன அழுத்தத்தில் உள்ளதாகவும் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பு
பள்ளிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் வழங்க வேண்டும் எனக் கூறிய பெற்றோர்கள், முதல்வரின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் பெரும் கோபம் வெடித்துள்ளது. ஆசிரியர்கள் பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நெட்டிசன்களும் கருத்து தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை ஆரம்பம்
இந்தச் சம்பவம் தொடர்பாக பில்குவா காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். வீடியோவும், சாட்சிகளும் அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கல்வி நிலையங்களில் மாணவர் பாதுகாப்பு குறித்து மீண்டும் பரபரப்பை உருவாக்கியுள்ள இந்தச் சம்பவம், பள்ளித் துறையில் துரிதமான மாற்றம் தேவை என்பதைக் கடுமையாக நினைவூட்டுகிறது.