×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணம் முடிந்த அடுத்தகணமே மாலையை கழற்றி மாப்பிளையின் முகத்தில் வீசிய மணமகள்!! வெளியான பகீர் காரணம்!!

pride throw garland while got marriage

Advertisement

பொதுவாகவே வடமாநிலங்களில் திருமண நிகழ்ச்சிகளின்போது ஆடல், பாடல் என கோலாகலமாக இருப்பது வழக்கம். மேலும் அவர்களின் நடனங்களில் எப்பொழுதும் பாம்பு நடனம் இடம்பெறும்.

இந்நிலையில் சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் டிப்ளமோ படித்த பெண்ணிற்கும், கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய இளைஞருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சொந்தங்கள் கூட அவர்களுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மாலையும், கழுத்துமாக நின்றிருந்த மணமகனை அவரது நண்பர்கள் பாம்பு நடனம் ஆட அழைத்துள்ளனர். அப்பொழுது மாப்பிள்ளையும் மிகவும் உற்சாகத்துடன் நடனமாடியுள்ளார். பின்னர் தள்ளாடியபடி கீழே விழுந்தும் அவர் எழுந்து நடனம் ஆடிக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் மணமகன் மதுபோதையில் உள்ளான் என்பதை அறிந்த மணமகள் கோபத்தில் மாலையை கழற்றி எறிந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து மணமகனின் பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் மணமகளையும் அவருடைய பெற்றோரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் மணமகள் பிடிவாதமாக இருந்த நிலையில் மணமகன் மணமகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து பெரும் சண்டை வெடித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர், பின்னர் இருதரப்பிடமும் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில்  பெண் சார்பில் கொடுத்த அனைத்து சீர்வரிசைகளையும் திரும்ப பெற்றுக்கொண்டு பெண்வீட்டார் அங்கிருந்து வெளியேறினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#marriage #liquior drink
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story