×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Manipur: மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் குடியரசு தலைவரின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, அம்மாநில முதல்வராக பாஜகவின் யும்நம் சிங் பொறுப்பேற்க இருக்கிறார்.

Advertisement

மணிப்பூரில் நடந்த குடியரசு தலைவரின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மணிப்பூர் கலவரம்:

இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தில், கடந்த 2023ம் ஆண்டு இரண்டு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை காரணமாக கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் அம்மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. இருதரப்பும் எதிர்தரப்பு மக்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வன்முறை தலைவிரித்தாடியது. பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து, அம்மாநிலத்தில் மக்களாட்சி நடக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. 

இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! சற்று முன்.... ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000..... .? வெளியான புதிய தகவல்.! நிதிதுறைக்கு அரசு உத்தரவு!

முடிவுக்கு வந்தது:

இனரீதியிலான வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட மணிப்பூரில், புதிய முதல்வராக யும்நம் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 2025ம் ஆண்டு நடந்த வன்முறையால் என். பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். தற்போது, அங்கு ஜனாதிபதி ஆட்சி நடந்து வந்த நிலையில், அதனை தளர்த்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் வாயிலாக கடந்த ஓராண்டாக மணிப்பூரில் நடந்து வந்த குடியரசு தலைவரின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Breaking News #manipur #India #bjp #Manipur Violence #மணிப்பூர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story