×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி.. கடவுள் அனுப்பிய தேவதையால் தாய்-சேய் நலம்.!

Woman Delivers Baby Moving Train Video: கர்ப்பிணிப்பெண் ஓடும் ரயிலில் குழந்தையை பெற்றெடுத்தார்.

Advertisement

குஷிநகர் அதிவிரைவு ரயிலில் பயணம் செய்த பெண் பத்திரமாக குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பிரசவ வலி:

மகாராஷ்டிரா மாநிலம் கோரக்பூரில் இருந்து உத்திரபிரதேசம் மாநிலம் குஷிநகர் நோக்கி அதிவிரைவு ரயில் சென்றுகொண்டு இருந்தது. இந்த ரயி கசாரா ரயில் நிலையம் அருகே சென்றபோது, ரயிலில் பயணம் செய்த கர்பிணிப்பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் இணைந்து தற்காலிக பிரசவ இடத்தை உருவாக்கி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு வயசாச்சு.. ஜாம் ஜாம்னு நடிகை திரிஷா வீட்டில் நடந்த கொண்டாட்டம்.! வைரல் புகைப்படங்கள்!!

மருத்துவ உதவி:

இந்த விஷயம் குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மும்பை - கோரக்பூர் 22538 ரயிலில் மே 10ம் தேதி பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரயிலிலேயே பிரசவம் நடந்துள்ளது. இந்த பிரசவத்துக்கு ரயிலில் பயணம் செய்த செவிலியர் பூஜா கார்கே என்பவர் உதவி இருக்கிறார். பிறந்த பெண் குழந்தை தாயின் அருகில் அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்துள்ளது. பிரசவம் பாதுகாப்பாக நிறைவுபெற்ற நிலையில், அடுத்த ரயில் நிலையத்தில் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு குழந்தைகள்:

ரயில் இகத்புரி சென்றதும் மருத்துவ பணியாளர்கள் குழுவினர் பெண்ணை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது தாயும்-சேயும் நலமுடன் இருக்கின்றனர். இந்த பிரசவத்துக்கு உதவிய செவிலியர் பூஜா, பிற பயணிகள், ரயில்வே பணியாளர்கள் அனைவர்க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதேபோல, புனே - சுபால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 28 வயது கர்ப்பிணி பெண்ணும் ரயிலில் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.


இதையும் படிங்க: ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trending #pregnant #Indian Railways #கர்ப்பிணி #பிரசவ வலி #ரயில் பயணம் #தேவதை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story