×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளின் பையில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் கருவி; பல வாலிபர்களுடன் தொடர்பு... கழுத்தை நெறித்து கொலை செய்த பெற்றோர்...!

மகளின் பையில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் கருவி; பல வாலிபர்களுடன் தொடர்பு... கழுத்தை நெறித்து கொலை செய்த பெற்றோர்...!

Advertisement

மகளின் பையில் கர்ப்பத்தைக் கண்டுபிடிக்கும் கருவி இருந்ததால், மகளை பெற்றோர் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 உத்தரப்பிரதேச மாநிலம், கவுசம்பி அருகில் உள்ள அலம்பாத் என்ற கிராமத்தில் வசிப்பவர் நரேஷ். இவர் தன்னுடைய 21 வயது மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கிராமத்திற்கு வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுகுறித்து விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன நரேஷ், ஷோபா தம்பதியின் மகள் என்று தெரிய வந்தது. 

இதை தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது இருவரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லி வந்தனர். ஒரு கட்டத்தில் மகளை நாங்கள்தான் கொலைசெய்தோம் என்று ஒப்புக்கொண்டனர். 

இது குறித்து காவல் அதிகாரி பிரிஜேஷ் குமார் கூறும் போது நரேஷ், மனைவி ஷோபாவுடன் சேர்ந்து அவர்களின் மகளைக் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறினர். அடையாளத்தை மறைப்பதற்காக உடல் மீது ஆசிட் ஊற்றி கால்வாயில் தூக்கிப் போட்டுள்ளனர். 

இதற்கு நரேஷ் சகோதரர்கள் இரண்டு பேர் உதவி செய்துள்ளனர். நரேஷ் அளித்த வாக்குமூலத்தில் பல வாலிபர்களுடன் தன்னுடைய மகள் போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும், மகளின் பையில் கர்ப்பத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படும் கருவி இருந்ததை பார்த்ததால் ஆத்திரம் ஏற்பட்டது.

மேலும் தங்கள் மகளுக்கு பல இளைஞர்களுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டு, கோபத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்தார்  என்று கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Uttar pradesh #21 Year Old Daughter #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story