தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலில் விழுந்த சாமியார்!..கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலியுடன் ஓட்டம்!.. பரபரப்பில் மடம்..!

காதலில் விழுந்த சாமியார்!..கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலியுடன் ஓட்டம்!.. பரபரப்பில் மடம்..!

preacher who fell in love wrote a letter and ran with his girlfriend Advertisement

கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சோலூர் பகுதியில் குத்தகே மடம் உள்ளது. இந்த மடத்தில் சாமியாராக இருந்து வருபவர் சிவமகந்தே சுவாமி என்ற ஹரீஷ். இவர் மடத்தில் இருந்து சாமியார் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சாமியார் நீண்ட நாட்களாக  ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுடன் சாமியார் மடத்தில் இருந்து ஓடி இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து ஓடிப்போன சாமியார் எழுதி வைத்திருந்த கடிதம் மடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ஒரு சாமியாராக என்னால் வாழ்க்கையை தொடர முடியவில்லை. நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும், இதன் காரணமாக மடத்தின் வாழ்க்கையில் இருந்து விடுபட முடிவு செய்தேன். என்னை யாரும் தேட வேண்டாம். வேறு எங்காவது சென்று நிம்மதியாக வாழ முடிவெடுத்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதே சாமியார் இதற்கு முன்பும் மடத்தில் இருந்து ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மாகடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #Ramanagara District #Ramanagara #Monastery #Saint
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story