×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

8 வருடமாக கிராமத்தின் ஒட்டுமொத்த தபால் சேவை ரத்து.. தபால் ஊழியரின் நயவஞ்சக எண்ணத்தால் துடித்துப்போன மக்கள்.!

8 வருடமாக கிராமத்தின் ஒட்டுமொத்த தபால் சேவை ரத்து.. தபால் ஊழியரின் நயவஞ்சக எண்ணத்தால் துடித்துப்போன மக்கள்.!

Advertisement

8 வருடங்களாக கிராம மக்களுக்கு கடிதங்களை விநியோகம் செய்யாத தபால்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டம், கனககிரி தாலுகா, கவுரிபுரா கிராமத்தில் தபால் நிலையம் ஒன்று உள்ளது. இந்த தபால் நிலையத்தில், சாகேப் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக தபால்காராக பணிபுரிந்து வரும் நிலையில், பசரிஹாலா, தேவலாபுரா, பைக்கலம்புரா, கவுரிபுரா போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கடிதங்களை வழங்குவது தான் இவருடைய வேலை. 

ஆனால், சாகிப் கடந்த 8 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு வந்த பான் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள், ஆதார் கார்டுகள் மற்றும் அரசு வேலைக்கான பணி நியமன ஆணை ஆகியற்றை விநியோகம் செய்யாமல் இருந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக கிராம மக்கள் கேட்டபோதெல்லாம், "உங்களுக்கு கடிதம் வரவில்லை" என்று அற்பத்தனமாக பொய் கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து கிராம மக்களுக்கு வந்த ஆதார் கார்டுகள், அரசு வேலைக்கான பணி நியமன ஆணை ஆகியவற்றை ஒரு சாக்குமூட்டையில் கட்டி கிராமத்தில் வைத்துள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அங்குள்ள மூட்டையை பிரித்து பார்த்தபோது, அங்கு ஆதார் கார்டு பான் கார்டு ஆகியவை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், இது குறித்து கிராம மக்களிடம் அவர்கள் கூறிய நிலையில், 'தங்களுக்கு அரசு சார்பில் கிடைக்க வேண்டிய பயன்கள் கிடைக்காமல் போய்விட்டது. இதற்கு முழுகாரணம் தபால்காரர் மட்டுமே, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#post man #karnataka #post office #kanakagiri
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story