×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குறிவைக்கப்படும் காதல் தோல்வியான இளம்பெண்கள்; பிளாக் மேஜிக் பெயரில் இலட்சக்கணக்கில் மோசடி..!

குறிவைக்கப்படும் காதல் தோல்வியான இளம்பெண்கள்; பிளாக் மேஜிக் பெயரில் இலட்சக்கணக்கில் மோசடி..!

Advertisement

 

வடமாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தவாறு படித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, காதலன் பேசாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில், இன்ஸ்டாகிராம் வழியாக Black Magic Astrologer என்ற பக்கத்தில் இருந்து நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் காதல் ஜோடியிடையே ஏற்படும் பிரச்சனைகளை பூஜைகள் மூலமாக நிவர்த்தி செய்ய இயலும் என மாணவியை நம்பவைத்து இருக்கின்றனர். இவர்ளின் பேச்சை நம்பி மாணவியும், பெற்றோர் தனது கல்லூரி செலவுக்காக கொடுத்திருந்த பணம் ரூ.6 இலட்சம் வரையில் அனுப்பி வைத்ததாக தெரியவருகிறது.

இறுதியில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சவே, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற புதுச்சேரி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pondicherry #India #Black Magic
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story