காதலிக்க மறுத்தால் கழுத்தறுத்துவேன் - இளம்பெண்ணுக்கு ரௌடி பகிரங்க மிரட்டல்..! சரமாரி தாக்குதல்.!!
காதலிக்க மறுத்தால் கழுத்தறுத்துவேன் - இளம்பெண்ணுக்கு ரௌடி பகிரங்க மிரட்டல்..! சரமாரி தாக்குதல்.!!
கொலைவழக்கில் தொடர்புடைய காதலனை திருந்திவரச்சொல்லியும் மாற்றம் இல்லாததால் பெண் காதலை கைவிட, ரௌடி காதலன் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வம்பாகீரப்பாளையம் பகுதியில் வசித்து வருபவன் சுந்தர் (வயது 21). இவன் அப்பகுதியில் ரௌடி போல வலம்வந்துள்ளான். இந்நிலையில், இதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை 3 வருடமாக சுந்தர் காதலித்து வந்துள்ளான்.
இந்நிலையில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சுந்தர் சிறைக்கு செல்லவே, தனது காதலன் ரௌடியா? என காதலி மிகுந்த வருத்தப்பட்டுள்ளார். மேலும், அவன் சிறையில் இருந்து ஜாமினில் வந்தபோது, அவனுடன் பேசாமல் இருந்துள்ளார்.
ரௌடித்தனத்தை கைவிட்டு வந்தால் தன்னை ஏற்றுக்கொள்வதாகவும், ஏற்கனவே நடக்கும் பல கொலைகள் காரணமாக உனக்கும் ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வேன் எதிர்காலத்தில்? என்று பேசி பார்த்தும் பலனில்லை. இதனால் காதலனை விட்டு பெண் விலக தொடங்கியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுந்தர் இருந்த நிலையில், பெண்மணி நேற்று தனது தோழிகளுடன் பாண்டிச்சேரி கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு வந்த சுந்தர் காதலியை தாக்கி, என்னை காதலிக்க வில்லை என்றால் கொலை செய்திடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.
சம்பவ இடத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடியதால் சுந்தர் தப்பி சென்றுள்ளான். காயமடைந்த பெண் மீட்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த விசயம் தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் பேரில் சுந்தரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.