தலைமை ஆசிரியரின் கண்டிப்பு.. 14 வயது சிறுமி, குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை.!
தலைமை ஆசிரியரின் கண்டிப்பு.. 14 வயது சிறுமி, குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் ராமு. இவரின் மனைவி கோதை. இவர்களின் இரண்டாவது மகள் சுவேதா (வயது 14). இவர் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு செல்லாமல் இருந்துள்ளார். கடந்த 6 ஆம் தேதி மீண்டும் சுவேதா பள்ளிக்கு சென்றுள்ளார். அவரை நேரில் அழைத்த தலைமை ஆசிரியர், பள்ளிக்கு ஏன் முறையாக வருவதில்லை? என்று கேள்வி எழுப்பி கண்டித்துள்ளார்.
மேலும், பெற்றோருடன் நேரில் வந்து பார்க்குமாறும் கூறவே, சுவேதாவும் தனது சகோதரரை பள்ளிக்கு அழைத்து சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து இருக்கிறார். இந்த நிகழ்வால் சுவேதா மனவேதனையில் இருந்துள்ளார்.
வீட்டில், நேற்று முன்தினம் குளியல் அறைக்கு சென்று நீண்ட நேரமாக வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், சுவேதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
அவரை மீது அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கவே, சுவேதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழப்பை உறுதி செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ரெட்டியார்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.