7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.!!
7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.!!
ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் வசித்து வரும் 7 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
இச்சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது தொடர்பாக காவல்துறையின் உதவியை நாடினர். சிறுமியின் பெற்றோரிடமிருந்து புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பிடித்து விசாரித்ததில் அவர் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையும் படிங்க: "வா கட்டிக்கலாம்..." திருமண ஆசை காட்டி சிறுமி கற்பழிப்பு.!! வாலிபர் மீது போக்சோ வழக்கு.!!
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். சிறுமிக்கு நடந்த கொடுமைகள் குறித்து இளைஞரிடம் தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... 17 வயது சிறுமி கர்ப்பம்.!! கல்லூரி மாணவர் கைது.!!