தயவுசெஞ்சு இத மட்டும் யூஸ் பண்ணாதீங்க! 28 வருஷமா மண்ணில் புதைந்தும் எதுவுமே ஆகல! அபாயத்தின் அதிர்ச்சி வீடியோ....
28 ஆண்டுகள் கழித்தும் மண்ணில் சீராக இருந்த பிளாஸ்டிக் பாக்கெட் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் பாதிப்பு மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டின் தாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகள் கழித்தும் மண்ணில் சீராக இருந்த பிளாஸ்டிக் பாக்கெட் காட்சி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
28 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிப்பு
சமீபத்தில் ஒருவர் நிலத்தை தோண்டியபோது, 1997 மார்ச் மாதத்தில் வெளியான ஜல்ஜீரா பாக்கெட் மண்ணுக்குள் புதைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியாக, 28 ஆண்டுகள் கழித்தும் அந்த பாக்கெட் சிதைவின்றி இருந்தது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் மாசு எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த வீடியோ devendersinghbana_naturelover என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டதுடன், 25 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் பெற்று, 75,000 பேரின் லைக்குகளையும் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தாய் பாவம்ல... குட்டி பூரான்களை பெற்றுடுத்த தாய்! நொடியில் பூரான் குட்டிகள் தாயை சாப்பிடும் அதிர்ச்சி தருணம்! வைரலாகும் வீடியோ..
இந்த சம்பவம், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் நீண்டகால விளைவுகளை மீண்டும் வலியுறுத்துகிறது. மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை இந்த வீடியோ சுட்டிக்காட்டுகிறது.