தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படியொரு ரசிகையா.! தனக்கு பிடித்த நடிகருக்காக மாற்றுத்திறனாளி பெண் செய்வதை பார்த்தீங்களா!!

physical challenged girl draw picture of salman khan

physical-challenged-girl-draw-picture-of-salman-khan Advertisement

பாலிவுட் சினிமாவில் ஏராளமான பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சல்மான்கான். இவருக்கென இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாரத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து சல்மான் கான் தற்போது தபாங்க் 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா இயக்கி வருகிறார். 

Salman khan

 இந்த படத்தில் வில்லனாக  பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கிறார். மேலும் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானும் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் மிகவும் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. 

 இந்நிலையில் சல்மான் கானின் தீவிர ரசிகையான மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவரது புகைப்படத்தை தனது கால்களால் வரைந்துள்ளார் .இதனை கண்டு மெய்சிலிர்த்துப் போன நடிகர் சல்மான் கான் அந்த பெண்ணின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



மேலும் அதில் இந்த அன்பிற்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் இருந்தாலும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் , கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salman khan #physical challenge
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story