தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2047க்குள் முஸ்லீம் நாடாக மாறும் இந்தியா.. PFI ஆதரவாளர்கள் பரபரப்பு தகவல்.. பயங்கரவாத திட்டத்துடன் செயல்பட்டது அம்பலம்.!

2047க்குள் முஸ்லீம் நாடாக மாறும் இந்தியா.. PFI ஆதரவாளர்கள் பரபரப்பு தகவல்.. பயங்கரவாத திட்டத்துடன் செயல்பட்டது அம்பலம்.!

PFI Supporters says 2047 India Muslim Country Terrorist Activity Advertisement

 

இந்தியாவை முஸ்லீம் நாடாக மாற்ற முயற்சித்து PFI நிர்வாகிகள் செய்யப்பட்டு வந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.

இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் பி.எப்.ஐ என்ற பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை தடை செய்து மத்திய அரசு அறிவித்தது. இவர்கள் மூலமாக மக்களிடையே மத பிரச்சனையை ஏற்படுத்துவது, பயங்கரவாதத்திற்கு நிதி உதவி திரட்டுவது போன்றவை நடத்தப்பட்டுள்ளன. 

மேலும், மதமாற்றத்தை ஈதிர்த்து குரல் எழுப்பிய தமிழகத்தை சேர்ந்த பாமக நிர்வாகி இராமலிங்கம், கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களை சேர்ந்த பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பலரும் பி.எப்.ஐ அமைப்பினரால் அல்லது அவர்களின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

PFI

இவர்களின் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில ஆண்டுகளாக கண்காணித்து வந்தது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு திட்டமிடல் தொடர்பான ஆவணங்களும் கிடைக்கப்பெற்றன. அதாவது, 2047-ற்குள் இந்தியாவை முஸ்லீம் நாடாக மாற்றுவதை குறிக்கோளாக வைத்து செயல்பட்டுள்ளனர். 

இதற்காக முஸ்லீம் இளைஞர்களை மதத்தின் பெயரில் தீவிரவாதிகளாக மாற்றி, இந்தியா முழுவதும் கலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா உட்பட தென்மாநிலத்தை சேர்ந்த சிலருக்கு பயிற்சியும் அளித்துள்ளனர். இவர்கள் நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் போன்றோரையும் கொலை செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர் என்ற தகவலும் அம்பலமாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#PFI #muslim #India #hindu #இந்தியா #முஸ்லீம் #இந்து #பயங்கரவாதிகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story