தொடர்ந்து 17 நாட்களாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலைக்கு இன்று பிரேக்!
petrol diesel price in chennai
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் மாற்றங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.83.04ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலையிலும் எந்த மாற்றமில்லாமல் லிட்டருக்கு ரூ.76.77 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து 17 நாள்கள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வந்தநிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை எந் மாற்றமில்லாமல் நேற்றைய விலையில் விற்கப்படுகிறது. இது வாகன ஒட்டிகளை சற்று நிம்மதியடையச் செய்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362