பேடிஎம் தகவல்களைத் திருடி ரூபாய் 20 கோடி பேரம்; குடும்பத்தோடு சிக்கிய பேடிஎம் பெண் ஊழியர்!
paytm lady assistant demanded 20 crore with husband
பேடிஎம் நிறுவனத்தில் உதவியாளராக 10 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர் மூன்று பேருடன் சேர்ந்து தகவல்களை திருடி பேடிஎம் உரிமையாளரிடம் ரூபாய் 20 கோடி பேரம் பேசி மிரட்டியுள்ளார். அந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேடிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் விஜய் சேகர் ஷர்மா. இவருடைய உதவியாளராக கடந்த பத்து வருடங்களாக பணிபுரிந்து வருபவர் சோனியா தவான். சோனியா விஜய் சேகர் ஷர்மாவினுடைய அலைபேசி, கணினி என அனைத்தையும் கையாண்டு வந்திருக்கிறார். அப்போது அவரது தனிப்பட்ட கோப்புகள் சிலவற்றைத் திருடி, தன்னுடைய கூட்டாளி ரோஹித் சோமல் என்பவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
சோனியாவுடன் அவரது கணவர் ரூபக் ஜெயின் மற்றும் பேடிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு ஊழியர் தேவேந்திர குமார் ஆகியோரும் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இவர்கள் திருடிய தகவலை ரோஹித் சோமல் என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அவரின் மூலம் பேடிஎம் உரிமையாளர் விஜய் சேகர் சர்மா மற்றும் அவரது சகோதரர் அஜய் சேகர் சர்மா ஆகியோரை அலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்ட செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மாலை ரோஹித் சோமல் முதலில் அஜய் சேகர் சர்மாவை தொடர்பு கொண்டு ரூபாய் 10 கோடி கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே அவரது சகோதரர் விஜய சேகர் சர்மாவை தொடர்பு கொண்டுள்ளார். அவர்களை தொடர்பு கொண்ட ரோஹித் சோமல் 10 கோடி ரூபாய் தரவில்லை என்றால் அவருடைய நிறுவனத்தின் தகவல்களை வெளியே கசிய விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் காலம் தாமதிக்கவே 20 கோடி ரூபாய் கேட்டு விஜய் சேகர் சர்மாவை மிரட்டியுள்ளார்.
ரோஹித் சோமலுக்கு பின்னால் ஒரு கும்பல் செயல்படுகிறது என்பதை அறிந்த ஷர்மா சகோதரர்கள் ரோஹித் சோமலுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அனுப்பி அவருக்கு பின்னால் இருக்கும் நபர்களின் தகவல்களை கேட்டு பெற்றுக்கொண்டனர்.
அதன்பின்னர் காவல் நிலையத்தில் அவர்கள் வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்த காவல்துறையினர் சோனியா தவான், ரூபன் ஜெயின் மற்றும் தேவேந்திர குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த திட்டத்தில் நான்காவது நபராக செயல்பட்டு வந்த ரோஹித் சோமலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.